தொடரும் குப்பை பிரச்சினை – ஹற்றனில் ஹர்த்தால்(photos)

0
13
Want create site? Find Free WordPress Themes and plugins.

ஹற்றன் நகரில் குப்பைகள் சேகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹற்றன் நகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹற்றன்-டிக்கோயா நகரசபையினரால் குறித்த குப்பைகள் சேகரிக்கப்படாமையினால் பொதுசந்தை உள்ளிட்ட இடங்களில் இவை குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், நகரமெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹற்றன் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் குடாஓயா பகுதியில் இறக்கப்பட்டு வந்த போதும் நீதிமன்றி உத்தரவையடுத்து அங்கு குப்பைகள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளதால், நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வைக் கோரி ஹற்றன் நகர வர்த்தகர்கள் இன்று வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments