கோலிவுட்டை அதிர வைத்த ஹரஹர மஹாதேவகி அமோகமான வசூல்

0
309

hara hara mahadevaki ஹர ஹர மஹாதேவகி படம் வெளிவந்து தற்சமயம் ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் உள்ளது. இப்படம் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்தது.

இப்படம் வெளிவந்து தற்போது ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த நிலையில் இப் படத்தின் வசூல் 8 கோடியைத் தாண்டி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது இப்படம் ஹிட் படம் தான் எனக் கூறப்படுகின்றது.

கேளிக்கை வரி ரத்து செய்யாததால் புதுப்படங்களை எடுப்பதில்லை என திரையரங்குகள் முடிவு செய்துள்ளனர், அதனால் ஹரஹர மஹாதேவகி படத்திற்கு நல்ல நேரமாக அமைந்துவிட்டது.

இப்போது இந்த படம் தமிழக்தில் எல்லா திரையரங்களிலும் வெற்றி நடைபோடுகிறது.பெரிய படங்கள் பல தோல்வி அடைந்த நிலையில் சிறிய பட்ஜெட் படத்தின் வசூல் சாதனையை கண்டு கோலிவுட் அதிர்ந்து உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments