ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை இம்மாத இறுதிக்குள் கைச்சாத்து

0
17

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை வரைபு அமைச்சரவையின் அனுமதிக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடன்படிக்கை வரைபு இறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com