ஹத்துருசிங்கவை எமக்கு தந்தால் நன்றாக இருக்கும் – திமுத்

0
34

ஹத்துருசிங்கவை எமக்கு தந்தால் நன்றாக இருக்கும் – திமுத் கருணாரத்த

பங்களாதேஸ் அணியின் கிரிக்கட் பயிற்சியாளராக இருந்து ராஜினாமா செய்யவுள்ள சந்திக ஹத்துருசிங்கவை இலங்கை அணியின் பிரதான கிரிக்கெட் பயிற்சியாளராக நியமித்தால் எதிர்கால சவால்களுக்கு சிறந்த கைங்கரியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்த இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கட் போட்டி சுற்றுக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ஊடகங்களின் மத்தியில் அவர் தனது அங்கலாய்ப்பை திமுத் கருணாரத்த வெளிப்படுத்தியுள்ளார்.

தாம் மாகாண போட்டிகளின் போது ஹத்துருசிங்கவிடம் பயற்சி பெற்றுள்ளதாகவும், தற்போதுள்ள வீரர்கள் தொடர்பாக அவர் மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் திமுத் கருணாரத்த கூறினார்.

சந்திக்க ஹத்துருசிங்க பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவிய போதும், அந்த விடயம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com