ஹட்டன் நோக்கி புறப்படும் பிரதமர் ரணில்!

0
24

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை (06) அட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில் இவர் கலந்துகொள்வதுடன், அன்றைய தினத்தில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்

இந்த நிகழ்வுகளை நுவரெலியா மாவட்ட ஐ.தே.கா நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஏற்பாடு செய்துள்ளார்.

பிரதமரின் 40 வருட அரசியல் பிரவேசத்தையொட்டி, இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் நுவரெலியா – அம்பேவெல தேசிய பால் பண்ணைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பால் சபை நிலைய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments