யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது – ஸ்ருதிஹாசன்

0
207
ஸ்ருதிஹாசன்
Want create site? Find Free WordPress Themes and plugins.

400 கோடி ரூபாய் செலவில் தமிழில் பிரம்மாண்டமாகத் தயாராக உள்ள சரித்திரப் படமான ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்க வேண்டாம் என கேன்ஸ் விழாவிற்குச் செல்வதற்கு முன்பு ஸ்ருதிஹாசன் முடிவெடுத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஸ்ருதிஹாசனுக்கும், சமூக வலைத்தளங்களில் செயல்படுபவர்களுக்கும் எப்போதுமே ஆகாது. ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற செய்தி வந்ததுமே அதைப் பலரும் விமர்சித்தனர். அதிலிருந்து இன்றுவரை சமூக வலைத்தளவாதிகள் ஸ்ருதிஹாசன் என்றாலே விமர்சிப்பதற்குத் தயாராகிவிட்டார்கள்.

ஸ்ருதிஹாசன் தற்போது அவர் நடித்து வெளிவர உள்ள ‘பெஹசன் ஹோரி தேரி’ ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி கருத்து சொல்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசயமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், “என் முகம், என் உடம்பு, இதை வைத்து நான் என்ன செய்தாலும் அது மற்றவர்களுக்குத் தேவையில்லாதது. சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி எழுதுவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நடிகையாக இருப்பவர் உடல் அமைப்பில் அடிக்கடி மாற்றங்கள் வருவது இயற்கைதான். தொடர்ந்து ஒரே மாதிரியான உடலமைப்பை வைத்துக் கொள்ள முடியாது. சில சமயங்களில் கதாபாத்திரங்களுக்காக உடலை ஏற்றவும் குறைக்கவும் வேண்டியிருக்கும்,” என்று சொல்லியிருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments