‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி’யின் வேட்புமனு திருட்டு

0
33

‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி’யினால் தாக்கல் செய்யப்படவிருந்த வேட்பு மனு நேற்று இரவு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரனை பிரதேச சபையில் சமர்பிக்கப்படவிருந்த வேட்பு மனுவே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

பொகுனுவிடயில் உள்ள, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை அச்சுறுத்தி குறித்த வேட்பு மனுவைக் களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com