ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தயார் – மஹிந்த

0
98

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“நிச்சயமாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது, ஜனநாயக முறையிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும்.

உள்ளூராட்சித் தேர்தலில் இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்திறன் மீதான கருத்து வாக்கெடுப்பாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.” என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com