ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும்

0
67

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்பு இடைநிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த நிறுவனம் தொடர்பில் உடனடி கொள்கை ஒன்றை வகுப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் நிறுவனம் தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்பதற்காக பொருளாதார குழுவிற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது தன்னுடைய பொறுப்பு என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள்

அரச வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவது போலவே இலாபங்களும் கிடைக்கின்றன.எனினும் நட்டம் ஏற்படும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது தனது அமைச்சின் பொறுப்பு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த 20 வருடமாக நன்றாக இலாபமீட்டிய நிறுவனத்திற்கு என்ன நடந்தது என்று முதலில் ஆராய்வது அவசியம் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments