வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதி

0
8

 

எந்தவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்வரும் 30ஆம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவது உறுதி என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.