வெள்ள அனர்த்தத்தினால் மின்சார சபைக்கு 300 மில்லியன் ரூபா நட்டம்

0
17

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மின்சார சபைக்கு 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால்
அனர்த்த நிலைமை காரணமாக 7 இலட்சத்து 73 ஆயிரம் மின்சார பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்சார வசதிகளை மீளப்பெற்றுக் கொடுக்க இலங்கை மின்சார சபை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வரட்சி நிலைமை காரணமாக மின்சார உற்பத்திக்கென மேலதிக எரிபொருள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீர் மின்சாரத்தை பிறப்பிக்கும் நீர்த்தேக்கங்களில் 47 வீத நீர் கொள்ளளவே உள்ளது . ஆனால் கடந்த வருடம் இந்த நீர் கொள்ளளவு 70 வீதம் வரை காணப்பட்டது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments