வெள்ளவத்தை இளைஞர்கள் கடத்தல் : 9 பேருக்கு விளக்கமறியல்

0
33
வெள்ளவத்தை

வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை – நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளதாகவும், அவருக்கு இந்தக் கடத்தலில் நேரடி தொடர்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது எனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அக் காலப் பகுதியில் திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றியதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com