வெள்ளவத்தை அனர்த்தத்திற்கு உரிய திணைக்களங்கள் பொறுப்புக்கூற வேண்டும்

0
40

வெள்ளவத்தை அனர்த்தத்திற்கு உரிய திணைக்களங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை அனர்த்தத்திற்கு கொழும்பு மாநகர சபையும், நகர அபிவிருத்தி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும்.

மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் பெரும் கவலையளிக்கிறது.

உரிய அனுமதியின்றி மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டட நிர்மாணப் பணிகளில் ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம். இது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த அனர்த்தப் பகுதியை நேரில் சென்று அமைச்சர் மனோகணேசன் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments