வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்தது கட்டடம் 20 பேர் காயம் 10 பேர் கவலைக்கிடம்

0
741

வெள்ளவத்தையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆறு மாடி திருமண மண்டப கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தின் வாகன நிறுத்தும் பகுதியியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்டடமானது தொடர்ந்து சரிந்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு கருதி அக்கட்டடத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தீயணைப்பு படை வீரர்கள், இராணுவத்தினர் ஆகியோர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.

வெள்ளவத்தையில் வெள்ளவத்தையில் வெள்ளவத்தையில் வெள்ளவத்தையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com