வெள்ளப் பெருக்கில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பளிக்க சர்வதேச நிவாரண மாநாடு

0
9
Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கையில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பெருகில் இருந்து நிரந்தரமாக மக்களுக்கு பாதுகாப்பளிக்க நிவாரணம் சேகரிக்கும் மாநாடொன்றை நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

எமது நாட்டில் நீண்டகாலமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் தருணத்தில் மாத்திரம் அதற்கான நிவாரணத்தை வழங்கிவிட்டு பின்னர் அதற்கான தீர்வை வழங்க மறந்துவிடுகின்றோம். தொடர்ச்சியாக இந்த தவறை செய்த வண்ணமே உள்ளோம்.

பூகோள ரீதியில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் 5 அல்லது 6 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வருடா வருடம் ஏற்படுகிறது. எமத நாட்டிலும் தற்போது வருடா வருடம் வெள்ளப் பெருக்கு ஏற்பட ஆரம்பித்துள்ளது.

அரசு இந்த விடயம் தொடர்பில் இதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டை மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்த வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இலங்கையில் ஒரு நிவாரணம் சேகரிக்கும் மாநாட்டை நடத்த ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அமைச்சரவையிலும் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நிதி அமைச்சர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு வெள்ளப் பெருக்கு மற்றும் நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து அந்த அறிக்கையை இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதுவர்களினூடாக குறித்த நாடுகளுக்கு அனுப்பி நிவாரண மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிவாரண மாநாடு நடத்துவது ஒன்று உலகில் புதிய விடயம் அல்ல பல்வேறு நாடுகளில் இம்மாநாடுகள் நடத்தப்பட்டுதான் வருகின்றன. இலங்கைக்கு தற்போது சர்வதேச ரீதியில் இருக்கும் நன்மதிப்பின் காரணமாக நாம் இலகுவாக நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு சேகரிக்கப்படும் நிதியின் ஊடாக சிறந்த நீர் முகாமைத்துவத்தை பேணுவதன் ஊடாக காலநிலை நீர்க்கேடு ஏற்படும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு பாதகாப்பளிக்க முடியும். கட்டாயம் நாம் இந்தச் செயற்பாட்டை செய்தே ஆகவேண்டிய சூழல் உள்ளோம். எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த மாநாட்டை நடத்த வேலைத்திட்டங்களை வகுத்துள்ளோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments