வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இலங்கையில் இடமில்லை

0
17

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தலையிட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அதிகாரிகளுக்கான கருத்தரங்கை கொழும்பு கலதாரி விடுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நேற்று அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா அமைப்புகள் அல்லது மனித உரிமைகள் பேரவை, அல்லது எந்தவொரு நாட்டினதும் அரசாங்கமும் எந்தவொரு நேரத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

‘எந்த நேரத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்குள் கொண்டு வரக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது நீதித்துறையை நம்ப வேண்டும் என்று கூறி வந்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீதியை வழங்குவதில் சுதந்திரமாக தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான பின்புலமும், தீர்ப்புகளில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாத நிலையும் நாட்டில் உள்ளதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் ஆலோசனைகளின்றி, சட்டப் பணிகளை முன்னெடுக்க இங்கு போதுமான சட்ட அறிவுடையவர்கள் தேவையானளவு இருக்கிறார்கள். இதன் விளைவாக, பிரச்சினை தீர்க்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement