வெளிநாட்டு தூதுவராலயமொன்றின் தேவைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை எதிரணி எதிர்க்கிறது

0
31

வெளிநாட்டு தூதுவராலயமொன்றின் தேவைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்து கருத்துக்களை முன்வைக்காது எதிரணி நாடாளுமன்ற அமர்வை சீர்குழைத்திருந்ததாக அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தேசிய அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை எதிரணியின் வசமுள்ளதால் அவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஜனாதிபதி குறித்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் விவாதிக்க நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால், அவர்கள் இதனை புறக்கணித்துவிட்டு வெளியில் ஊடகவியலாளர் சந்திப்புகளை வைத்து முரண்பாடான கருத்துகளை கூறிவருகின்றனர்.

வெளிநாட்டு தூதுவராலயமொன்றின் தேவைக்காகவே எதிரணியினர் நாடாளுமன்ற அமர்வை சீர்க்குழைத்திருந்தனர். அது எந்த தூதுவராலயம் என்று நான் கூற விரும்பமில்லை. உங்களுக்கே தெரியும். பாராளுமன்றித்தில் குழப்பம் ஏற்படுத்தியவர்களைப் பார்த்தால் எந்நாட்டு தூதுவராலயம் என்பது புரியும்.
சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மறுசீரமைப்புகளை இரு நாடுகளும் கலற்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சரத்து இடம்பெற்றுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com