வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை தடை செய்ய நடவடிக்கை

0
54

வெளிநாடுகளுக்கு  பெண்களை அனுப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு அண்மையகாலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தத்து.

இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காய் அனுப்புவது எதிர்காலத்தில் முற்றாக தடை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.எம் அமீர் தெரிவித்துள்ளார்.

பெண்களை

வெளிநாட்டு வேலைவாய்ப்பினூடாக இலங்கை ஏழாயிரம் பில்லியன் ரூபா வருமானத்தை வருடாந்தம் பெற்றுக்கொள்கிறது. வருமானம் ஈட்டும் நோக்கில் பெண்கள் வெளிநாடு செல்வதனால் குடும்பம் பாதிப்படைவது மாத்திரமன்றி பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் பெண்கள் வெளிநாடு செல்வதை முற்றாக தடைசெய்து நன்கு தேர்ச்சியடைந்த ஆண்களை அதிக சம்பளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமன்றி, மலேசியா, கொரியா, இத்தாலி, சைப்ரஸ் போன்ற நாடுகளுக்கும் பயிற்சி பெற்றவர்களை அனுப்ப முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com