வெடிமருந்து வைத்திருந்தவர் கைது

0
19

வெடிமருந்து வைத்திருந்தவர் கைது

வெடிமருந்துவெருகல் பிரதேசத்தில் வெடிமருந்து வைத்திருந்தவர் கைது
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெடி மருந்து மூன்று கிலோவினை வைத்திருந்தநபர் ஒருவரை நேற்றுக் காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெருகல் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்டபோதே மூன்று கிலோ வெடிமருந்துகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் நேற்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com