வீரர்களுக்கு விருது இல்லை

0
41

தாய்நாட்டுக்காக, பல்வேறு வழிவகைகளில் தங்களது பங்களிப்பை நல்கிய விசேட நபர்களுக்கு விருது அளிக்கும், தேசிய வீரர்கள் விருது விழா, 12 வருடங்களின் பின்னர், நேற்று (20) இடம்பெற்றது.விருது

இருப்பினும், இந்த விருது விழாவின் போது, நாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்த அல்லது, நாட்டைப் பாதுகாத்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருக்கும், எவ்வித விருதும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, 89 பேருக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

தேசத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களிப்பு நல்கியவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே, இந்த விருது விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments