வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

0
41

வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ் பருத்தித்துறை மாதனி பகுதியல் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி இரண்டு, ஐந்து பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டிருந்தன.

இதேவேளை நேற்றைய தினம் தொலைபேசி திருட்டுடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கற்கோவளம் பகுதியைச்சேர்ந்த 21, 22 வயதுடைய இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் பருத்தித்துறை பொலிசார் மீட்டுள்ளர்.

குறித்த நபர்களிடமிருந்து இரண்டு தொலைக்காட்சிகள், ஐந்து டீ.வி.டி பிளேயர் மற்றும் ஐந்து பவுண் சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரையும் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com