விஸ்வநாதன் ஆனந்தின் தமிழன் என்கிற பெருமை!

0
144

தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் என பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement