விம்பிள்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் வீனஸ்

0
33

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் ஸ்பெயினின் கர்பின் முகுருசாவை எதிர்கொள்ளவுள்ளார். நேற்று நடைபெற்ற அரையிறுதிபோட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள்ள நுழைந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement