விமல் வீரவன்சவுக்கு பிணை

0
12

விமல் வீரவன்சவுக்கு 87 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் இன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னாள் அரசின் காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விமல் வீரவன்சவுக்கு
விமல் வீரவன்ச

விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த அவர் 8 நாட்கள் போராட்டம் மேற்கொண்டும் பிணை வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஐயாயிரம் ரூபா ரொக்கமும், ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments