விமல் வீரவங்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

0
112

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான 41 வாகனங்களை தவறான முறையில் பயன்படுத்தினார் என்றும் இதனால், அரசாங்கத்துக்கு 41 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.    

Advertisement