விபத்தில் ஒருவர் பலி – 9பேர் காயம்

0
22

கதிர்காமம் – புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார்.

அத்துடன், 9 பேர் காயமடைந்தனர்.

கெப் ரக வாகனமும், சிறிய லொறியும்; மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், கதிர்காமம், தெபரவௌ, சிரிகல மற்றும் புத்தள ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவையைச் சேர்ந்த 93 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com