விபச்சார விடுதி ஒன்று கல்கிசை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு

0
90
விபச்சார விடுதி
brothel

விபச்சார விடுதி ஒன்று கல்கிசை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு. அப்பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட உல்லாச விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் உல்லாச விடுதி நடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபரான ஆண் குறித்த உல்லாச நடவடிக்கைகளுக்கு முகாமைத்துவம் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபச்சார தொழில் ஈடுப்பட்டமை தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கல்கிசை மற்றும் பெத்தர பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடைய பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement