Advetisement

முகப்பு News Local News வித்தியா வழக்கு – தீர்ப்பு வெளியானது. படங்கள், காணொளி இணைப்பு

வித்தியா வழக்கு – தீர்ப்பு வெளியானது. படங்கள், காணொளி இணைப்பு

0
129

வித்தியா வழக்கு – தீர்ப்பு வெளியானது.

புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வித்தியா வழக்கு - தீர்ப்பு

2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன் ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

வித்தியா வழக்கு - தீர்ப்பு

மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் சற்று முன்னர் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முதலாம் மற்றும் 7 ஆம் சந்தேகத்துக்குரியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு நீதாய விளக்கமன்றின் மூன்று நீதிபதிகளாலும் ஏகமனதாக வழங்கப்பட்டதாகும்.

இதற்கு முன்னர் நீதிபதிகள் தங்களது தீர்ப்பு அறிக்கையை தனித்தனியே வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணொளி

சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments