வித்தியா படுகொலை வழக்கு – 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

0
801
Want create site? Find Free WordPress Themes and plugins.

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் தீர்ப்பாய முறையில் இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கின் பிரதான ஒன்பது சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அரச செலவில் ஒன்பது சந்தேக நபர்களுக்குமான பொதுவான சட்டத்தரணி ஒருவரும் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியர் எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்தார்.

கடத்தியமை, வன்புணர்வு செய்தமை, கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன், சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக மன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கை தொடர் விசாரணைகள் இம்மாதம் 28ஆம் 29ஆம் 30ஆம் மற்றும் அடுத்தமாதம் 03ஆம் 04ஆம் 05ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.

இதன்போது வழக்கின் 37 சாட்சிகளும் குறித்த நாட்களில் மன்றில் முன்னிலையாகுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments