விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றில் ஆஜர்

0
70

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடன் ஏய்ப்பு மீதான வழக்கில் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவது தொடர்பான மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச்செல்லுவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், பல்வேறு நிபந்தனைகளுடன் மல்லையா இந்தியா அழைத்து வரப்பட்டு, கடன் ஏய்ப்பு வழக்கில் தண்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்திற்கு தப்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments