விஜயகலாவை இரகசிய பொலிஸில் ஆஜராகுமாறு ஊர்காவற்துறை நீதவான் பணிப்பு

0
1081

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

விஜயகலாவை

நாளை 28ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி வருவதாக அறிவித்துள்ளார். தான் கைதாகலாம் என அச்சத்தில் விஜயகலா திகதியை மாற்றியுள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுமாறு ஊர்காவற்துறை நீதவான் மொஹமட் மிஹால் இரகசிய பொலிஸாருக்கு கடந்த 25ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments