விக்ரமுக்கு வில்லனாக மாறினார் சிம்ஹா?

0
32
Want create site? Find Free WordPress Themes and plugins.

விக்ரம் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம் பொலிஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பதும் முக்கியமான விடயம்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்துக் கொடுத்தபிறகு ‘சாமி-2’ வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments