வாழைச்சேனை பகுதியில் ரயில் – ஓட்டோ மோதல்

0
17

மட்டக்களப்பிலிருந்து  கொழும்பு நோக்கி நேற்று சென்ற இரவுநேர கடுகதி ரயிலில் வாழைச்சேனை மஜ்மா நகர் 193 மைல்கல் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட ஓட்டோ மீது  ரயில் மோதியதில் ஓட்டோ முழுமையாக சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை

வாழைச்சேனை ரயில்நிலையத்திற்கும் புணாணை ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட மஜ்மா நகர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் வாழைச்சேனையில் இருந்து மஜ்மா நகர் கிராமத்திற்கு சென்ற ஓட்டோவே மோதுண்டு விபத்துக்குள்ளானது.

ஓட்டோவில் சென்ற சாரதியுடன் நால்வர் எதுவித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், ஓட்டோ நீண்ட தூரம் தூக்கி எறியப்பட்டுள்ளது., இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்கு வரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments