வாள்களுடன் ஒருவர் கைது

0
16

நான்கு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்தில் சிறைச்சாலையில் இருந்த நபருடைய ஒருவருடைய வீட்டில் இருந்தே இந்த வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com