வாரணாசி-கொழும்பு இடையே நேரடி விமானப் போக்குவரத்து

0
22

இந்தியாவின் வாரணாசிக்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடிய நேரடி விமானப் போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகள் இம்முறை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நரேந்திர மோடி இன்று உத்தியோகப்பூர்வமான ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கலாசாரத்தில் இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளமையால் இலங்கையில் இருந்து வாரணாசிக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ள இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்த நேரடி விமான சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆதரப்பிக்கப்படவுள்ளன என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com