வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? பரிசீலித்துக்கொள்ளுங்கள்

0
48

2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் கணக்கெடுப்பின் ஆரம்ப படிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதற்கான ஆவணங்கள் இன்று(10) தொடக்கம் செப்டெம்பர் ஆறாம் திகதிவரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அதில் பரிசீலிக்கலாம். பதிவு செய்யப்படவில்லையாயின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் வழங்கியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு www.elections.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு பரீசீலித்துப்பார்க்கலாம் அதற்கு தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் மாவட்டத்தையும் உள்ளிட்டு பரீசீலிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments