வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள்

0
128

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில், இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்தது. அதனைப் பார்த்த சிலர் பொலிஸாருக்கு தகவல் அறிவித்தனர். இந்நிலையில் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.வவுனியாவில்

வவுனியா, குருமன்காடு பிரதேசத்தின் வீதிகள் சிலவற்றிலும், டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அருகாமையிலும், பரவி வீசப்பட்டுக் கிடந்தது.

அத்துண்டுப்பிரசுரத்தில் தமிழ்ப் பெண்களால் இழைக்கும் பிழைகளை, புலிகளின் புலனாய்வு பிரிவு அவதானித்துக் கொண்டிருக்கிறது எனவும், தமிழ்ப் பெண்கள், சிங்கள ஆண்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடாது. உங்களை எம் புலனாய்வுப்பிரிவு துல்லியமாக அவதானித்து வருகிறது, அவ்வாறு தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.வவுனியாவில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com