வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

0
34

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளில் 28.2 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை ஊறணிப் பகுதியிலுள்ள சுமார் 28.2 ஏக்கர் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளே மேற்படி விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இதனை முன்னாள் அரசின் காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் சில காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் 28.2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிளில் உள்ள கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு பற்றைக்காடுகளாக உள்ளதாக காணிகளைப் பார்வையிட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 27 ஆண்டுகளின் பின்னர் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments