வறட்சியால் பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

0
21

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 17 மாவட்டஙகளில் மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 49 (3,14,049)குடும்பங்களைச் சேர்ந்த பத்து இலட்சத்து 93 ஆயிரத்து 717 பேர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஏனைய தகவல்கள் வருமாறு:
வடமாகாணமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 1,33,678 குடும்பங்களைச் சேர்ந்த 4,62,815 பேரும், வடமேல் மாகாணத்தில் 82,513 குடும்பங்களைச் சேர்ந்த 2,81,013 பேரும், கிழக்கு மாகாணத்தில் 59,003 குடும்பங்களைச் சேர்ந்த 2,11,736 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 45,730 குடும்பங்களைச் சேர்ந்த 1,49,962 பேரும், வடமத்திய மாகாணத்தில் 23,285 குடும்பங்களைச் சேர்ந்த 5,904 குடும்பங்களைச் சேர்ந்த 20,641 பேரும், மத்திய மாகாணத்தில் 7,668 குடும்பங்களைச் சேர்ந்த 29,868 பேரும், ஊவா மாகாணத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 812 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,875 குடும்பங்களைச் சேர்ந்த7,230 பேரும் ஏனையோர் தென்மாகாணத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் பத்து

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே சிறிது மழையும் பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments