வரவு செலவுத் திட்டத்திற்கு முன்பு மாகாண சபைகளுக்கானத் தேர்தல்

0
21

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்பு மாகாணசபை களுக்கான தேர்தல் பழைய முறைப்படியே நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

பைஸர் முஸ்தப்பா
பைஸர் முஸ்தப்பா

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கானங்களின் கால எல்லை நிறைவடையவுள்ளது. குறித்த மாகாணங்களுக்கானத் தேர்தலை நடத்த அரசு தயாராகி வருகிறது.

என்றாலும், இந்தத் தேர்தலை புதிய முறைப்படி நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது. நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும்.

இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இதனால், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னர் இந்தத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பான சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அது முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், அது வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும். பின்னர் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com