வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை 

0
29
வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன்வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தை தாண்டி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள  43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமாகின.
போட்டிகளின் முதல் நாளான நேற்றுக் காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாண்டி மீண்டும் தேசிய சாதனை படைத்தார்.
Advertisement