வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றம்

0
32

வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றம்

நிதி ஒதுக்கீடு

யாழ்ப்பாணம்; வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 114வது அமர்வு இன்று வியாழக்கிழமை (14.12) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு கடந்த 111வது அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் சபையின் அங்கீகாரத்திற்காக முன்மொழியப்பட்டு, கடந்த 3 நாட்களாக விசேட அமர்வுகள் இடம்பெற்று, ஒதுக்கீடுகள் விவாத்திற்குட்படுத்தப்பட்டன.

உள்ளுராட்சி மற்றும் கல்வி, விவசாயம், சுகதாரம், மீன்பிடி போக்குவரத்து, கூட்டுறவு, மகளீர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள், விவாத்திற்குட்படுத்தப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டது.

முதலமைச்சர் மொத்த செலவீனங்களின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி நிதி ஒதுக்கீடாக 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரத்தினை சபையின் அங்கீகாரத்தினை வழங்குமாறு முன்மொழிந்தார். இதனை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வழிமொழிந்தார்.

எனவே, வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை சபை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இதனை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உத்தியோகபூர்வமாக அறிவித்து 2018 ஆம் ஆண்டிற்குரிய முதலவாது அமார்வினை ஜனவரி மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement