வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

0
218
Want create site? Find Free WordPress Themes and plugins.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர்.

அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை.

இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு மாகாணசபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, கையளித்தனர்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிய இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறும், மேலும் இருவருக்கு எதிராக புதிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ள நிலையில், முதலமைச்சருக்கு எதிராக இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு முதலமைச்சர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments