வடக்கு-கிழக்கில் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான திட்டப்  பணிகள் நாளை ஆரம்பம்

0
31
வடக்கு-கிழக்கில் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான திட்டப்  பணிகள் நாளை ஆரம்பம்
வடக்கு-கிழக்கில்
வடக்கு-கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான திட்டப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த வீட்டுத் திட்ட பணிகளுக்கான கேள்விப்பத்திரக் கோரல், அச்சு ஊடகங்களின் ஊடாக நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.
இதையடுத்து, குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதன் பின்னர், அவை குறித்து மதிப்பீட்டுக் குழு ஆராய்ந்து உரிய தரப்பினரை தெரிவு செய்து பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான பணிகளை இந்த வருட இறுதிக்குள்  ஆரம்பிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். மற்றும் இத் திட்டத்துக்கான ஆரம்பப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.
Advertisement