வடக்கில் இராணுவத்துக்கு உயிராபத்து : பதறுகிறார் கம்மன்பில

0
39

வடக்கிலுள்ள இராணுவத்தினர், பொலிஸாரினது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், இதை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, யாழ்.வாள்வெட்டு சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்துக்கு

“யாழ்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. தற்போது பொலிஸ் அதிகாரிகளையே தாக்கி வெட்டுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும்.

அங்குள்ள படையினர், பொலிஸாரின் உயிர் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை. இனியும் அப்படி இருக்கமுடியாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement