இன்னுமொரு புதிய ஏவுகணை பரிசோதனை முன்னெடுப்பதற்கு வடகொரியா  தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

0
31

 இன்னுமொரு புதிய ஏவுகணை பரிசோதனை முன்னெடுப்பதற்கு வடகொரியா தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வடகொரியா

ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான சட்டமன்றக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய சர்வதேச விவகார சட்மன்ற குழு உறுப்பினர் கடந்த 2ஆம் திகதி வடகொரியாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான சட்டமன்றக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் அன்டன் மோரோசோவ், ‘வடகொரியாவானது மீண்டும் ஏவுகணைச் சோதனைக்கு தயாராகி வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது நீண்ட தூர ஏவுகணைச் சோதனையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த ஏவுகணைச் சோதனையானது, அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தை தாக்கக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வடகொரியா அண்மைக்காலமாக பல அணுவாயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

சர்வதேசங்களின் எதிர்ப்புக்கள் மற்றும் தடைகளை மீறி இந்த ஏவுகணை பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதானால் கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தமது கண்டனங்களையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments