இன்று இலங்கை வந்துள்ள லேக் ஈரி

0
44

அமெரிக்க இராணுவ கப்பலான லேக் ஈரி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இலங்கை வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய லேக் ஈரி கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இன்று வருகைதந்த குறித்த லேக் ஈரி எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் புறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இக் காலப்பகுதியில் கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் குறித்த கப்பல் ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments