லா லிகா லீக் கால்பந்து வில்லா ரியல் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது

0
34

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் லா லிகா லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் வில்லா ரியல் அணி 10 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை சாய்த்து அதிர்ச்சி அளித்தது.

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அட்லெடிகோ மாட்ரிட் கிளப்வில்லா ரியல் கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வில்லா ரியல் அணி 10 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை சாய்த்து அதிர்ச்சி அளித்தது. 82வது நிமிடத்தில் வில்லா ரியல் அணியின் மாற்று ஆட்டக்காரர் ராபர்டோ வெற்றிக்கான கோலை அடித்தார்.

பல்வேறு போட்டிகளில் கடந்த 13 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்த அட்லெடிகோ மாட்ரிட் அணியின் வெற்றிப்பயணத்துக்கு வில்லா ரியல் அணி முடிவு கட்டியது.

லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 33 லீக் ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 75 புள்ளியும், ரியல் மாட்ரிட் அணி 32 ஆட்டங்களில் ஆடி 23 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 75 புள்ளியும், அட்லெடிகோ மாட்ரிட் அணி 34 ஆட்டத்தில் ஆடி 20 வெற்றி, 8 டிரா, 6 தோல்வியுடன் 68 புள்ளியும் பெற்று புள்ளி பட்டியலில் முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com