லாஸ் வேகஸ் தாக்குதல்தாரியின் தோழியிடம் விசாரணை

0
41

அமெரிக்க லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய ஸ்டீபன் பட்டொக்கின் பெண் தோழியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரிலொஸ் டேன்லீ என்ற அவர், இதன்பொருட்டு பிலிப்பைன்ஸிலிருந்து நேற்று லொஸ்ஏஞ்சல்ஸை வந்தடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக  மெரிலொஸ் டேன்லீ, பிலிப்பைன்ஸிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை பரிமாற்றம் செய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

லஸ் வேகஸில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டதுடன், 500 பேரளவில் காயமடைந்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments