லஷ்மிகரமான பெயரைக்கொண்ட நடிகையின் ரீ-டுவீட்டால் வந்த வினை

0
164

லஷ்மிகரமான பெயரைக்கொண்ட நடிகையின் ரீ-டுவீட்டால் வந்த வினை

லஷ்மிகரமான

லஷ்மிகரமான சாமியின் பெயரைக் கொண்ட நடிகை. மங்காத்தா விளையாடிய நடிகை, சமீபத்தில் வெளியாகிய பாலிவுட் படமொன்றில் நடித்திருந்தார். இதில் நடிகை தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். இப்படம் வெளியாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டதாம். இந்நிலையில், சமீபத்தில் இப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்று வருகிறதாம். மேலும் எதிர்பார்த்தளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்யவில்லையாம் என அப்படத்தின் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதை வெளிப்படையாக ஒரு பத்திரிக்கை ட்விட்டரில் வெளியிட்டுள்ளதாம். மொழி தெரியாத சாமியின் பெயரைக்கொண்ட இந்த நடிகை, அந்த பதிவை ரீ-டுவிட் செய்திருக்கிறாராம். அந்தப்பதிவானது படம் படுதோல்வி மற்றும் சரிவர ஓடவில்லை எனவும் பதிவிடப்பட்டிருந்தது. இதைத் தெரியாத அந்த நடிகை, அப்பதிவை ரீ-டுவீட் செய்ததால், ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்களாம். என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியாமல் நடிகை இப்படி நடந்துக் கொண்டதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement